Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாளய பட்சம் ஆரம்பம்; மக்களை தேடி ...
முதல் பக்கம் » துளிகள்
குருவருள் இன்றி திருவருள் இல்லை; குருவை வழிபட குறையாவும் நீங்கும்..!
எழுத்தின் அளவு:
குருவருள் இன்றி திருவருள் இல்லை; குருவை வழிபட குறையாவும் நீங்கும்..!

பதிவு செய்த நாள்

19 செப்
2024
10:09

கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் (குரு) ஆசியால் உண்டாவது குருவருள். பரம்பொருளான கடவுளின் பார்வை நம் மீது பட்டால்  கிடைப்பது திருவருள். ஆசிரியரின் அருட்பார்வை நம் மீது பட்டால் தெய்வத்தின் அருள் தானாகவே கிடைக்கும் என்பதையே  குருவருள் இல்லாமல் திருவருள் இல்லை என்று குறிப்பிடுவர். தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடுபவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தெட்சிணாமூர்த்தி. ஞானமானது தெட்சிணாமூர்த்தியின் முன்னிலையில் அவரையே நோக்கி நின்றுகொண்டிருக்கிறது.


குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பதால் இப்பெயர் உண்டானது. மேலும் கு என்றால் இருள் அல்லது அறியாமை என்றும், ரு என்றால் போக்குபவர் என்றும் பொருள் உண்டு. உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, அவனை அழித்து, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அறியாமையை அழிக்கும் இத்தகைய வாழ்க்கை கல்வியை அளித்தவர் என்பதால், இவர் குருவாக மதிக்கப்படுகிறார். குருவின் அருள் இருந்தால் தான், ஒருவருக்கு மணவாழ்வு, குழந்தைப்பேறு உண்டாகும். இவற்றில் தடை உள்ளவர்கள் வியாழக்கிழமை விரதம் மேற்கொள்வது நன்மை அளிக்கும். 

 
மேலும் துளிகள் »
temple news
தட்சிணாயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசையும், உத்தராயண காலத்தில் வரும் முதல் ... மேலும்
 
temple news
இன்று பவுர்ணமி திதி, 17ம் தேதி காலை, 11:22 மணி முதல், 18ம் தேதி காலை, 9:10 மணி வரை உள்ளது. இதுவே பவுர்ணமி கிரிவலம் வர ... மேலும்
 
temple news
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்," என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே ... மேலும்
 
temple news
இன்று ஒரே நாளில் ஷடசீதி புண்ணிய காலம், அனந்த விரதம், பவுர்ணமி, புரட்டாசி மாத பிறப்பு என ஒன்றாக வருவது ... மேலும்
 
temple news
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் கவுரி விரத பூஜை செய்யப்படுகிறது. கவுரி விரதத்தில் சிவனையும், அம்மனையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar