திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவ விழா; திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21செப் 2024 08:09
ராமநாதபுரம்; பூக்குழி உற்ஸவ விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் வடக்கு தெரு திரவுபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. திரவுபதி அம்மன் கோயிலில் செப்.16ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.தினமும் அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடக்கிறது. செப்.17ல் பூங்கரகம் எடுத்து வந்தனர். நேற்று காலை 10:00மணிக்கு அர்ஜூனன்,திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். செப்.24ல் கீசக வதம், செப்.25ல் அரவான் களப்பலி, செப்.27 ல் இரவு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.