Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை வேண்டி மழை சோறு எடுத்து கிராம ... புரட்டாசி கார்த்திகை பூஜை; பழநி முருகன் கோவிலில்  நான்கு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் புரட்டாசி கார்த்திகை பூஜை; பழநி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலைக்கேணியில் கார்த்திகை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலைக்கேணியில் கார்த்திகை விழா

பதிவு செய்த நாள்

22 செப்
2024
11:09

நத்தம்; சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோயிலில் புரட்டாசி மாத கார்த்திகை விழாவில் சாமி ஊர்வல நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருமலைக்கேணியில் புரட்டாசி மாத கார்த்திகை விழாவையொட்டி மூலவர் சுப்ரமணிய சுவாமி, உற்ஸவர் முருகப்பெருமானுக்கும் பால், பழம், பன்னீர், சந்தனம், ஜவ்வாது, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்ய வெள்ளிக் கவச அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பின் லட்சார்ச்சனை, தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷமிட கோயிலை வலம் வந்து தரிசனம் செய்தனர். திண்டுக்கல், சாணார்பட்டி,நத்தம், கோபால்பட்டி, செந்துறை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.காமாட்சி மவுனகுரு மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோயில் அறக்காவலர் அழகுலிங்கம் செய்திருந்தார். நத்தம் அசோக் நகர் பகவதி அம்மன் கோயிலில் உள்ள வெற்றிவேல் முருகன் சன்னிதியில் ஆவணி மாத கார்த்திகை விழா பூஜையில் முருகனுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. வேம்பார்பட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மஹா தீப கொப்பரை சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மலை உச்சிக்கு கொண்டு ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சத்ய சாய் ... மேலும்
 
temple news
விழுப்புரம்பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஓசூரம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா, இன்று  நடந்தது.செங்கல்பட்டு அருகே ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்: நாகையில் பிரசித்திப் பெற்ற பழமையான, சௌந்தரநாயகி அம்பாள் உடனுறை சொர்ணபுரீஸ்வர சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar