Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருவறைக்குள் அம்மனுக்கு பக்தர்கள் ... கும்பகோணம் மகாமக பெருவிழாவை தேசிய விழாவாக அறிவிக்க வேண்டும் கும்பகோணம் மகாமக பெருவிழாவை தேசிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அச்சிறுபாக்கம் பசுபதீஸ்வரர் கோவிலில் 27 அடி திரிசூலம் பிரதிஷ்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அச்சிறுபாக்கம் பசுபதீஸ்வரர் கோவிலில் 27 அடி திரிசூலம் பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

23 செப்
2024
11:09

அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கத்தில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம், வஜ்ரகிரி மலை உள்ளது. இந்த மலையின் மீது, பழமையான மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.


இக்கோவிலில், சிவஜோதி ருத்ரசேனா குழுவினர் வாயிலாக, 27 அடி உயர திரிசூலம் பிரதிஷ்டை செய்வதற்கான பூஜை, நேற்று நடந்தது. திரிசூல சிவசக்தி சங்கமம் குழுவினர் சார்பில், திருவாசகம் முற்றோதுதல் திருவிழா நடந்தது. மாணிக்கவாசகரின் திருவாசகம் பாடல்கள் முற்றோதுதல் நிகழ்ச்சி, திருக்கழுக்குன்றம் சிவனடியார் சிவதாமோதரன் தலைமையில் நடந்தது. நிறுவப்பட்ட 27 அடி உயர திரிசூலம், வாகனம் வாயிலாக, 7 நாட்கள், சென்னை மீஞ்சூர், காளஹஸ்தி, ராமேஸ்வரம், சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரை, சமயபுரம், மயிலாப்பூர், திருவேற்காடு, காஞ்சிபுரம் உள்ளிட்ட புனித தலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பூஜை செய்யப்படுகிறது. பின், அச்சிறுபாக்கம் கொண்டுவரப்பட்டு, வஜ்ரகிரி மலையின் மீது, மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் எதிரே பிரதிஷ்டை செய்யப்படும் என, சிவஜோதி ருத்ரசேனா குழுவினர் தெரிவித்தனர். இவ்விழாவில், ஹிந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத், மக்கள் பிரதிநிதிகள், சிவனடியார்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும், பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar