முதல் நாள் காலை அனுக்ஞை, மகா கணபதி அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகாகணபதி, சுதர்சன, மகாலட்சுமி ஹோமங்கள் நடந்தன. மாலை வாஸ்துசாந்தி, பிரவேசபலி, யாகசாலை பூஜை நடந்தது. இரவு மூலவர் யந்திர ஸ்தாபனம், கோபுர கலச ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. 2ம் நாள் காலை 6 மணிக்கு விநாயகர் பூஜை, சூரியகும்பபூஜை, 3ம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடந்தது.தொடர்ந்து, அய்யனார் சுவாமி, மாடசாமி, காளியம்மன், கருப்பசாமி ஆகிய விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பூர்ணாதேவி புஷ்பகலாதேவி சமேத சொரிமுத்து அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. திரளானோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியை மதுரை அனுமார் கோயில் சபரி குருசர்மா நடத்தி வைத்தார். இரவு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை சொரிமுத்து அய்யனார் கோயில் 21 கிராம நாடார்கள் சமுதாயத்தினர், விழாக்கமிட்டியார் செய்திருந்தனர்.