Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ... புனித ஜெபமாலை அன்னை தேர்த்திருவிழா கொடியேற்றம் புனித ஜெபமாலை அன்னை தேர்த்திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சியில் 108 வேல் பூஜை; முருகபெருமானின் மறு ரூபம்.. ‘வேல்’ வழிபட்டால் நன்மை பெருகும்
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சியில் 108 வேல் பூஜை; முருகபெருமானின் மறு ரூபம்.. ‘வேல்’ வழிபட்டால் நன்மை பெருகும்

பதிவு செய்த நாள்

27 செப்
2024
05:09

பொள்ளாச்சி; முருகனின் மறு ரூபமான வேலினை வழிபட்டால் நன்மை உண்டாகும் என, 108 திருவேல் பூஜையில் தெரிவிக்கப்பட்டது. முருகப்பெருமானுக்கு, 108 வேல் வழிபாட்டுப் பெருவிழா, திருவேல் வழிபாட்டு பேரவை மற்றும் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில், பல்லடம் ரோடு, கே.கே.ஜி., மண்டபத்தில் நடந்தது.  பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். கவுமாரமடம் சிரவை ஆதீனம் ராமனாந்த குமரகுருபர சுவாமி, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, பாலமுருகனடிமை சுவாமி, முத்துசிவராம சுவாமி அடிகளார், முத்துசிவராமி சுவாமி, ராமனாந்த மகராஜ், அவிநாசி ஆதீனம் காமாட்சிதாச சுவாமி, 108 சக்திபீடம் காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்படி, 108 வேல்களைக் கொண்டு, கணபதி வேள்வி, மூலவர் அபிஷேகம், திருப்புகழ் பாராயணம், கலச பூஜை, 108 திருவேல் பூஜை உள்ளிட்டவை நடந்தது. விழாவில், முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் பணியை திருவேல் வழிபாட்டுப் பேரவை செய்து வருகிறது. அதன்படி,  முருகனின் மறு ரூபமான வேலின் வழிபாட்டு முக்கியத்துவத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்லப்படுகிறது. வீட்டில் ‘வேல்’ வைத்து வணங்கினால் நீண்ட நாள் திருமணம் ஆகாதவர்களுக்கு தடை நீங்கும். சுகப்பிரசவம், குழந்தைபேறு, வம்சவிருத்தி உண்டாகும். செய்யும் தொழிலில் வளர்ச்சி மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். தொழில் மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் விலகி நன்மை உண்டாகும். இளைஞர்கள் கல்வியில் மேன்மையும், உயர்வும், வேலைவாய்ப்பும் பெறுவர் என, தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar