Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 221 கிலோ லட்டில் பெருமாளின் விஸ்வரூப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆழியாறுக்கு நன்றி தெரிவித்து ஆரத்தி பெருவிழா! குருமகா சந்நிதானங்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
ஆழியாறுக்கு நன்றி தெரிவித்து ஆரத்தி பெருவிழா! குருமகா சந்நிதானங்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

28 செப்
2024
10:09

பொள்ளாச்சி; கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலையில், ஆழியாறு ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும், ஆரத்தி பெருவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு முன்னதாக, ஆனைமலை திரவுபதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.


கோவிலில் இருந்து, தமிழகத்தின் குருமஹா சந்நிதானங்கள், ஆதீனகர்தாக்கள், துறவியர், ஆன்மிக பெரியோர் ஊர்வலமாக ஆழியாறு ஆற்றங்கரைக்கு வந்தனர். அங்கு, வாழ்வாதாரம், சுகாதாரம், பெருமை, கவுரவமாக விளங்கும் ஆழியாறு தாய்க்கு நன்றி தெரிவித்து ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து, ஆசி வழங்கினர். தமிழ்நாடு அரசு, ஹிந்து சமய அறநிலையத்துறை உயர்நிலைக்குழு உறுப்பினர் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை நான்காவது குருமகா சந்நிதானங்கள் சிரவை ஆதீனம் கவுமாரமடம் ராமானந்த குமர குருபர சுவாமிகள், ஆனைமலை ஆர்ஷய வித்யா பீடம் பூஜ்யஸ்ரீ ததேவானந்த சரஸ்வதி சுவாமிகள், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் நிறுவனர் சுவாமி ராமானந்த மஹராஜ், ஸ்ரீ வாகீசர் மடாலயம் அவிநாசி ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் உள்ளிட்ட ஆதீனங்கள், துறவியர், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அகில பாரத சந்நியாசிகள் சங்கம், ஆர்ஷ வித்யா பீடம், மஹாத்மா காந்தி ஆசிரமம், விவேகானந்தா அறக்கட்டளை, ஆலம் விழுது அமைப்பினர் செய்திருந்தனர். ஆற்றில் கழிவு நீர் கலக்க கூடாது, குப்பையை கொட்டக்கூடாது, இறந்த விலங்குகளை வீசக்கூடாது, நீரின் புனிதம் காக்க வேண்டும் என உறுதி எடுக்க வேண்டும், ஆண்டு தோறும் பவுர்ணமி நாளில், ஆரத்தி விழா நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கோவை மாவட்டம், காரமடை அரங்கநாத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு இன்று புரட்டாசி இரண்டாம் ... மேலும்
 
temple news
ஒரே நாளில் புரட்டாசி சனி, ஏகாதசி வருவது பெருமாள் வழிபாட்டிற்கு சிறப்பானதாகும். ஏழுமலையானுக்கு ... மேலும்
 
temple news
பெரம்பூர்; பெரம்பூர் அன்னதான சமாஜம் சார்பில் 221 கிலோ லட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ... மேலும்
 
temple news
மதுரை;  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar