ஆழ்வார்குறிச்சி; ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதிகளில் புரட்டாசி 2ம் சனிக்கிழமை கருடசேவை நடந்தது. கீழாம்பூர் தெற்கு கிராமத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் நடந்த கருடசேவை நிகழ்ச்சியில், கட்டளைதாரர் விஸ்வநாதஐயர் குடும்பத்தினர் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகளை கோயில் அர்ச்சகர் கோவிந்தராஜன் பட்டாச்சாரியார் நடத்தினார். பின்னர் பெருமாள், தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தல், தீபாராதனை நடந்தது. மாலையில் சகஸ்கரநாம அர்ச்னை, இரவு பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா நடந்தது. * ஆழ்வார்குறிச்சி கீழகிராமம் வேங்கடேசப்பெருமாள், கீழாம்பூர் வடக்கு தெரு வெங்கடேசபெருமாள், கடையம் ராமர் கோயில், கிருஷ்ணன் கோயில், ரவணசமுத்திரம் பெருமாள் கோயில், ஆழ்வார்குறிச்சி நவநீதகிருஷ்ணசுவாமி கோயில், ஆதிநாதபெருமாள் கோயில் உட்படசுற்று வட்டார பெருமாள் கோயில்களில் கருடசேவை நடந்தது.