Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி சிவன் கோவிலில் ஊழியர்கள் ... ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதிகளில் கருடசேவை; பக்தர்கள் வழிபாடு ஆழ்வார்குறிச்சி, கடையம் பகுதிகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் 6 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

30 செப்
2024
01:09

திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், தொடர் விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்செந்துாரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசன வழி, 100 ரூபாய் கட்டண தரிசன வழிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 


போக்குவரத்து நெரிசல் ; திருச்செந்துார் கோயில் வளாகத்தில் ரூ. 200 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகள் நடப்பதால் கோயில் வளாகத்தில் போதிய இடவசதி இல்லாததால் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். வரிசையில் சுவாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் குழந்தைகளுடன் காத்து நின்றனர். கோயில் வளாகத்திலும் நகரில் கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar