பதிவு செய்த நாள்
01
அக்
2024
11:10
ஆர்.கே. பேட்டை; ஆர்.கே. பேட்டை அடுத்த, ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தின் தென்மேற்கில் அமைந்துள்ளது பஞ்சாட்சர மலை. மலை உச்சியில், 500 ஆண்டுகள் பழமையான மரகதவல்லி உடனுறை மரகதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை, பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. 1,008 அடி உயரம் கொண்ட இந்த மலைக் கோவிலுக்கு காட்டு வழியே பக்தர்கள் கொண்டு வந்த பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் நந்தியம் பெருமான் மற்றும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதே போல, ஆர்.கே. பேட்டை அடுத்த, வங்கனூர் வியாசேஸ்வரர் மலை கோவில், வீராணத்தூர் வீரட்டானேஸ்வரர் கோவில், சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவில், நாகப்பூண்டி நாகேஸ்வரர் கோவில்களிலும் நேற்று பிரதோஷ விழா நடந்தது.