பதிவு செய்த நாள்
01
அக்
2024
12:10
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் தாரா வாராஹி லோக கல்யாணர்த சேவா பாரத் அறக்கட்டளையின் நிறுவனர் பச்சு. அவினாஷ் தேவி சந்திர பிடாபுரத்தில் உள்ள பாதகாய சக்திபீடத்தில் இருந்து இம் மாதம் 23 -ஆம் தேதி தொடங்கி 11 நாட்கள் தாரா வாராஹி அம்மனின் தீக்ஷை மேற்கொண்டு அங்கிருந்து (லோக கல்யானார்த்தம்) உலக நன்மைக்காக அகண்ட தீபத்தைக் கையில் ஏந்திக்கொண்டு பாதயாத்திரையாகப் புறப்பட்டு துவாரகத் திருமலையை தொடர்ந்து பல்வேறு கோவில்களில் தரிசனம் செய்துக்கொண்டு வழியில் ஸ்ரீ காளஹஸ்தீஷ்வரரையும் தரிசனம் செய்தார். பின்னர், ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள மணிகன்டேஸ்வர சுவாமி கோவிலில், ஸ்ரீகாளஹஸ்தி தேவஸ்தான தலைமை அர்ச்சகர் சம்மந்தம் குருக்கள் அவினாஷ் தேவி சந்திராவிடம் அகண்ட தீபத்தை ஏற்றி வழங்கியதோடு கோவிலை அகன்ட தீபத்துடன் பிரதஷனம் வலம் வந்ததோடு நான்கு மாடி வீதிகளில் ஊர்வலமாக அகண்ட தீபத்தை எடுத்து சென்றனர்.
பச்சு அவினாஷ் தேவி சந்திராப் கூறியதாவது; கலியுகத்தின் இறைவன் வெங்கடேஸ்வர சுவாமி கலப்படப் பிரசாதம் செய்தக் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று இம் மாதம் 23- ஆம் தேதி பிட்டாபுரம் ஸ்ரீ வாராஹி சன்னதியில் இருந்து இந்த பயணம் தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதியன்று திருப்பதியை அடைகிறது. பயணத்தின் வழியில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்ததாகவும், தெரிந்தோ தெரியாமலோ திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி லட்டு பிரசாதத்தில் பாவம் நடந்ததாக கூறினார். இந்தப் பாவத்தை மன்னிக்கப்பட வேண்டுமாயின் பரிகாரம் செய்ய அகண்ட தீபத்தை ஏற்ற வேண்டும் என்பதற்காக 11 நாள் தீட்சை மற்றும் அகண்ட தீபாராதனை நிகழ்ச்சியை மேற்கொண்டதாக கூறினார். நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால் தீபம் ஏற்றி வைப்பதில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று கூறினார். நம் பாரத முழுவதும் அகன்ட தீபத்தை ஏற்றி, இயற்கையை காப்பாற்றவில்லை என்றால் அதன் சீற்றத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும், கொரோனா சமயத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றியதாகவும், அந்த விளக்குகளின் வெளிச்சத்தில் கொரோனா தொற்று மறைந்ததாகவும், விளக்கை ஏற்றினால் பாவங்கள் அஞ்சும் என்றும் மேலும் பஞ்சபூதங்கள் அமைதி பெறும் என்றும் கூறினார்.