பாரம்பரிய பொங்கல் விழா; கிடா வெட்டி வழிபட்ட மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2024 01:10
மேலுார்; சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி மக்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். இக்கிராமத்தில் உள்ள சின்னடைக்கி, பெரியடைக்கி மற்றும் ஆண்டி அரசன் மகன் கோயில் புரட்டாசி மாத திருவிழா நேற்று நடந்தது. திருவிழாவை முன்னிட்டு மக்கள் மந்தையில் ஒன்று கூடினர். கிராமத்து பெரியவர்கள் முன்னே நடந்து செல்ல பொங்கல் வைக்கும் பெண்கள் பித்தளை கலயத்தில் பொங்கல் வைக்கவும், சில்வர் பாத்திரத்தில் மாவிளக்கு வைப்பதற்கான பூஜை பொருட்களையும், நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்க பெற்றவர்கள் சுவாமி சிலைகளையும் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள கோயிலுக்கு குலவையிட்டபடி சுமந்து சென்றனர். அங்கு மழை பெய்து விவசாயம் செழிக்கவும், நோய் நொடி இல்லாமல் எல்லா வளமும் கிடைக்க வேண்டி மக்கள் கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். இத் திருவிழாவில் பெரிய, சின்னசூரக்குண்டு, அய்யர்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.