Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக நன்மைக்காக அகண்ட தீபம் ஏந்தி ... பாரம்பரிய பொங்கல் விழா; கிடா வெட்டி வழிபட்ட மக்கள் பாரம்பரிய பொங்கல் விழா; கிடா வெட்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயில் ராஜகோபுர சுதை சிற்பம் சேதம்; பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
 பழநி முருகன் கோயில் ராஜகோபுர சுதை சிற்பம் சேதம்; பக்தர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

01 அக்
2024
12:10

பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் 2023 ஜனவரியில் நடந்த நிலையில் ராஜ கோபுரத்தின் சுதை சிற்பம் சேதமடைந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


கோயிலுக்கு உலகம் முழுதுமிருந்து பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். கோயிலில் 2023 ஜன., 27 கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக புனரமைக்கப்பட்ட ராஜ கோபுரம் வலது புற சுதை சிற்பம் யாழி பின்புறம் வளைவு உடைந்துள்ளது. இதை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடைந்த சுதை சிற்ப வளைவை ராஜகோபுரம் மீதுள்ள இடிதாங்கி கீழே விழாமல் தாங்கிப் பிடித்துள்ளது. ராஜகோபுரத்தின் மேற்பகுதியில் சுதை சிப்பம் மனிதர்களால் சேதப்படுத்த முடியாத உயரத்தில் உள்ள நிலையில் மின்னல் தாக்கியிருக்கலாம் அல்லது தரமற்ற பணிகளால் சேதமடைந்திருக்கலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.


விஸ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில் திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது : கும்பாபிஷேகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. கோபுரங்கள், கலசங்கள், சுதை சிற்பங்கள் போன்றவற்றை புனரமைத்து புதுப்பிக்கத்தான் கும்பாபிேஷக பணி நடக்கிறது. இக்கோயில் கும்பாபிேஷகம் நடந்து ஓராண்டு 8 மாதங்கள் ஆகியுள்ளது. அதற்குள் சிற்பம் உடைந்திருக்கிறது என்றால் உடனடியாக ஹிந்து அறநிலையத்துறை இதனை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். உறுதிதன்மையை பரிசோதிக்க வேண்டும். குரங்கு அமர்ந்ததால் இப்படி நடந்து விட்டதென தேவஸ்தான நிர்வாகம் கூறியதாக ஒரு தகவல் பரவுகிறது. இதுகுறித்து சோதிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோபுரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் உடனடியாக புனரமைத்து பாலாலயம் செய்து கோபுரத்திற்கு கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். ஆகம விதிப்படி இதனை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலன மக்கள் கோயிலுக்கு செல்லும் முன் கோபுரத்தை பார்த்து விட்டுதான் செல்வர். எனவே ஆகம விதிப்படி உரிய விதிமுறைகளைப் பின்றி கும்பாபிேஷகம் நடத்த வேண்டும். மற்ற கோபுரங்களின் தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்றார். கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து கூறுகையில், ‘‘ராஜகோபுரத்தின் சுதை சிற்பம் சேதமடைந்துள்ளதை ஆகம விதிகளுக்கு உட்பட்டு விரைவில் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் சரி செய்யப்படும்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கரமடத்தின் 68 வது பீடாதிபதி சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரையில் பை பாஸ் நால் ரோடு சந்திப்பு பகுதியில் நீலிமலை அய்யப்ப பக்தர்கள் குழு சார்பில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஈச்சனாரி விநாயகர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை, அமைச்சர் சேகர்பாபு ... மேலும்
 
temple news
கடலுார்; திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில், தருமபுரம் ஆதினம் தரிசனம் செய்தார்.கடலுார் ... மேலும்
 
temple news
திருப்போரூர்; செங்கல்பட்டு, திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar