பதிவு செய்த நாள்
04
அக்
2024
10:10
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது கோவில் வளாகத்தில் வைக்கப்பட்ட சக்தி கொலுவில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
வடபழநி ஆண்டவர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா நேற்று (3ம் தேதி) முதல் கோலாகலமாக துவங்கியது. நேற்று மாலை யாகசாலை பூஜைகளுடன் துவங்கிய விழாவில், தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. அம்மன் கொலு சன்னதியில் காலை 11 மணி, மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கும். நவராத்திரி பத்து நாட்களிலும் தினமும் மாலை 5 முதல் 7 மணி வரை லலிதா சகஸ்ரநாம, வேத, திருமுறை பாராயணங்கள், மகளிர் கொலு பாட்டு நடக்க உள்ளது. நேற்று முதல் நாளில் சக்தி கொலுவில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.