பதிவு செய்த நாள்
22
நவ
2012
10:11
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், திருக்கார்த்திகை விழா இன்று(நவ.,22) காலை 10.40 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிச.,1 வரை நடக்கும் விழாவில், தினமும் காலை, மாலையில், பஞ்சமூர்த்திகள் ஆடி வீதி புறப்பாடு நடக்கிறது. நவ.,28ல், திருக்கார்த்திகையன்று, கோயில் முழுவதும் லட்சதீபம் ஏற்றப்படுகிறது. அன்றிரவு 7 மணிக்கு, மீனாட்சி சுந்தரேஸ்வரர், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கீழமாசிவீதிக்கு செல்கின்றனர். தேரடி அருகே, சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் எழுந்தருளு கின்றனர். விழா நாட்களில், கோயில் மற்றும் உபயதாரர்கள் சார்பாக, தங்கரத உலா, உபய திருக்கல்யாணம் நடத்தப்படமாட்டாது, என இணை கமிஷனர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.