பதிவு செய்த நாள்
07
அக்
2024
03:10
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கும்மிடிப்பூண்டி, பஜார் வீதியில், அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, சுதர்சன ஹோமம், லட்சார்ச்சனை, திருக்கல்யாண வைபவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்ட சிறப்பு உற்சவங்கள் நடைபெற்றன. இன்று முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக, பஜனை கோஷ்டியுடன், கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள், அவரவர் வீடுகள் முன் கோலமிட்டு அர்ச்சனை செய்து பெருமாளை வழிபட்டனர்.