பதிவு செய்த நாள்
08
அக்
2024
10:10
உபாங்க லலிதா கவுரி விரத நாளில் துர்கையில் அவதாரமான லலிதா தேவியை வழிபட வேண்டும். இன்று லலிதா தேவியை வழிபட மகிழ்ச்சி, செழிப்பு, அறிவு, ஞானம் பெறலாம். நவராத்திரியில் இன்று கவுமாரி தேவி வழிபாட சகல பாவங்களும் விலக்கிடும். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு.
ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானது. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டியில் தரிசிக்க தடைபட்டுவந்த செயல்கள் யாவும் நிறைவேறும்.