பதிவு செய்த நாள்
05
அக்
2024
10:10
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை வழிபட்டால் கஷ்டங்கள் யாவும் நீங்கும். பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பாகும். பெருமாளை வழிபடும் போது நினைத்தாலே கண்முன்னே கருடன் காட்சி தருவார் என்பது மாதத்தின் சிறப்பாகும்.
நவராத்திரி மூன்றாம் நாளில் அம்பிகையை வராஹியாக அலங்கரிக்க வேண்டும். பன்றிமுகத்துடன் கூடியவளாக விளங்கும் இவளை வழிபட்டால் பகைவர் பயம் நீங்கும். வராகியின் அருளால் விரும்பிய வரம் கிடைக்கும். மதுரை மீனாட்சியம்மன் இன்று ஏகபாத மூர்த்தியாக காட்சி தருகிறாள். இன்று அம்மனை வழிபட்டால் மனம், உடல்பலம் அதிகரிக்கும்.
பாட வேண்டிய பாடல்
குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம் நின்குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே
புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசிப்பதற்கு சனிக்கிழமை உகந்த தின மாகும். புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை நாளில் பெருமாளை வழிபட்டால் வாழ்வில் வரக்கூடிய எல்லாவித கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கை கிடைக்கப் பெறுவோம். அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். ஓம் நமோ என்னும் திருமந்திரத்தை போற்றி வழிபட வேண்டும். நெற்றியில் திருநாமம் தினமும் தரிப்பது புரட்டாதி மாதத்தில் செய்யக்கூடிய முக்கிய வழி முறையாகும். பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பாகும். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் அனைத்து பழங்கள், வெண்பொங்கல், முந்திரிப்பருப்பு, நெய் அனைத்தும் சேர்ந்த பிரசாதத்தை வாழை இலையில் தனியல் போடுவது என்பது ஐதீகமாக செய்து வரக்கூடிய முறையாகும். பெரு மாளுக்கு மாவிளக்கு போட்டு தீபம் ஏற்றி வைத்து அறுகவை காய்கறிகளோடு பெரு மாளுக்கு படைப்பார்கள். படைக்கும் பொழுது கருட பகவானை காட்சி தரு மாறு வேண்டி தீபாராதனை காட்ட கண்முன்னே கருட பகவான் பறந்து வந்து காட்சி தருவது புரட்டாசி பெருமாளுக்குரிய மாதத்தின் தனிச் சிறப்பாகும். இன்று அம்பிகை, பெருமாளை வணங்க நல்லதே நடக்கும்