சிருங்கேரி சாரதா பீடம் சாரதாம்பாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11அக் 2024 10:10
கோவை; கோவை ரேஸ் கோர்ஸ் சிருங்கேரி சாரதா பீடம் சாரதாம்பாள் கோவிலில், நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாள் மற்றும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் மூலவர் சிம்ம வாகினி ரூபத்தில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாரதா தேவியை தரிசனம் செய்தனர்.