விஜயதசமி; தருமபுரம் ஆதீனத்தில் தங்க எழுத்தாணி கொண்டு பனை ஓலையில் கையெழுத்திட்ட ஆதீனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2024 11:10
மயிலாடுதுறை; விஜயதசமியை முன்னிட்டு பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரிய முறையில் தங்க எழுத்தாணி கொண்டு பனை ஓலையில் கையெழுத்திடும் திருக்கை ஒப்பம் நிகழ்ச்சி மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது இந்த மடத்தில் ஆதீன மடத்தில் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது பாரம்பரியமான முறைப்படி தங்க எழுத்தாணி கொண்டு பனை ஓலையில் கையெழுத்திடும் திருக்கை ஒப்பம் ஓகே நிகழ்ச்சி நடைபெற்றது தருமபுரம் ஆதீன 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் தங்க எழுத்தாணி கொண்டு பனை ஓலையில் கையெழுத்து விட்டார் தொடர்ந்து திருமுறைகள் பாராயணம் செய்யப்பட்டது முன்னதாக புனித நீர் கொண்டு ஆதீன மடாதிபதிக்கு எஜமான அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.