பதிவு செய்த நாள்
13
அக்
2024
10:10
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன், நவராத்திரி பெருவிழாவின் நிறைவு நாளான நேற்று, கெஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள், அன்னையும் அழகனும் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சி 47வது வார்டு, திருவள்ளுவர் 2வது குறுக்கு தெரு, அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பில் உள்ள ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவிலில், பவானி அம்மன், சாந்த சொரூபிணி அலங்காரத்தில் அருள்பாலித்தார். சின்ன காஞ்சிபுரம் வரதராஜபுரம் தெரு, வரசித்தி விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளிமுக்கிய வீதி வழியாக உலா வந்தார். காஞ்சிபுரம் அடுத்த, நல்லுார் கிராமத்தில் உள்ள சங்கரா செவிலியர்கல்லுாரியில் உள்ள பெரியவர்களின் முகாமில், சுந்தரி குழுவினர் மற்றும் எஸ்.எஸ்.கே.வி., பள்ளி மாணவர்களின் மரபிசைக் கச்சேரி நடந்தது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இரவு 8:00 மணிக்கு விஜயதசமி,நவாவர்ணம் பூர்த்தி நடந்தது. தொடர்ந்து, காஞ்சி காமகோடி பீடம் ஆஸ்தானவித்வான்கள் பங்கேற்ற நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த, மங்களபுரிக்ஷே த்ரம், கண்ணந்தாங்கல் 108 சக்திபீட கோவிலில், அன்னப்பாவாடை, மஞ்சள், திருமாங்கல்ய சரடு அலங்காரம் நடந்தது.