களக்குடி ஓமாட்சி முத்து காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2024 05:10
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை அருகே களக்குடி கிராமத்தில் உள்ள ஓமாட்சி முத்து காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை விழா நடந்தது. புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கோயிலில் கடந்த செப்., 16 அன்று கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு மூலவர் ஓமாச்சி முத்துக்காளியம்மன், முருகன், விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. யாக வேள்வி வளர்க்கப்பட்டது. புனித கும்ப நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை களக்குடி ஓமாட்சி முத்து காளியம்மன் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.