குன்றத்துார்; குன்றத்துார் அருகே மாங்காடில், பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, நேற்று மாலை 5:00 மணிக்கு, திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், 108 பெண்கள் பங்கேற்று, விளக்கேற்றி வழிபட்டனர். தொடர்ந்து, கோவிலில் நிறைமணி காட்சி விழா நடந்தது. இதில், 1.5 டன் எடையுள்ள காய்கறிகள், பழங்கள், இனிப்பு பலகார வகைகள் கொண்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமாமான பக்தர்கள் கண்டு ரசித்து, அம்மனை தரிசித்தனர்.