ஐப்பசி முதல் நாள்; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2024 03:10
வால்பாறை; ஐப்பசி முதல் நாளான இன்று ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி சன்னதியில், ஐப்பசி மாதம் முதல் நாளான இன்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அதனை தொடர்ந்து, பால், நெய், இளநீர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜையும் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். இதே போல், வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலிலும் நேற்று காலை ஐப்பசி மாத சிறப்பு பூஜைகள் நடந்தன.