ரூ.43 லட்சத்தில் ராமேஸ்வரம் கோயில் யானைக்கு மணிமண்டபம்; பணி துவங்கியது
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2024 10:10
ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் திருக்கோயில் யானை பவானிக்கு ரூ. 43 லட்சத்தில் மணிமண்டபம் கட்டும் பணி துவங்கியது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி, திருவிழா காலத்தில் கோயில் ரத வழியில் வலம் வந்த யானை பவானி 2012ல் கோவை அருகே தேக்கம்பட்டியில் நடந்த புத்துணர்வு முகாமில் ஆற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. பக்தர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற யானை பவானிக்கு மணி மண்டபம் அமைக்க ஹிந்து அறநிலைத்துறை முடிவு செய்தது. ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணியை துவக்காமல் ஹிந்து அறநிலைத்துறை கிடப்பில் போட்டது. இதனையடுத்து பக்தர்களின் வலியுறுத்தலால், தற்போது ரூ. 43 லட்சம் செலவில் ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கிங்கில் கருங்கல்லில் மணிமண்டபம் கட்டுமான பணியை துவக்கி உள்ளது. இந்த மணி மண்டபத்திற்குள் யானை பவானி சிலை வைக்கப்பட உள்ளது. இந்த கட்டுமான பணி ஜூனில் முடிவடையும் என ஸ்தபதிகள் தெரிவித்தனர்.