தேய்பிறை சஷ்டி; சுந்தராபுரம் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22அக் 2024 01:10
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ஐப்பசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை மற்றும் தேய்பிறை சஷ்டி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் இருக்கும் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.