Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி விஜயகணபதி கோவிலில் ... ராசிபுரம் நித்தியசுமங்கலி மாரியம்மனுக்கு 1008 கிலோ பூக்களால் பூச்சாட்டுதல் விமர்சை ராசிபுரம் நித்தியசுமங்கலி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதித்த கரிகால சோழன் கட்டிய கோவிலில் கிருஷ்ணதேவராயர் செப்பேடு கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதித்த கரிகால சோழன் கட்டிய கோவிலில் கிருஷ்ணதேவராயர் செப்பேடு கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

23 அக்
2024
11:10

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில், ஆதித்த கரிகால சோழனால் கட்டப்பட்ட சிங்கீஸ்வரர் கோவிலில், கிருஷ்ணதேவராயர் செப்பேடு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில், மெய்ப்பேடு என்ற மப்பேடில், சுந்தர சோழனின் மகனும், ராஜராஜ சோழனின் அண்ணனுமான ஆதித்த கரிகால சோழனால், 967ல் கட்டப்பட்டது, சிங்கீஸ்வரர் கோவில். இதே ஊரில் பிறந்தவர் அரியநாத முதலியார். இவர், மதுரை நாயக்கர்களின் தளவாயாக இருந்தவர். இவர், சிங்கீஸ்வரர் கோவிலுக்கு ராஜ கோபுரம் கட்டியதுடன், அதன் வடகிழக்கு மூலையில் உள்ள பாலீஸ்வர மரகத பச்சைக்கல்லால் ஆன கோவிலையும் புதுப்பித்து விரிவாக்கினார். விஜயநகர மன்னர்கள் காலத்தில், இந்த கோவில் வழிபாடு மற்றும் பூஜைகளுக்காக தானங்கள் வழங்கப்பட்டதுடன், தெலுங்கு பிராமணர்கள் பூஜை செய்வதற்காக பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.


நில தானம்; இந்நிலையில், விஜயநகர மன்னர்களில் சிறந்தவராக கருதப்படும் கிருஷ்ண தேவராயர், இந்தக் கோவிலில் பணி செய்த பிராமணர்களுக்கு, நிலம் தானம் செய்துள்ளார். அதற்கு சான்றான செப்பேடு, தற்போது கோவிலில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் தென்மண்டல பிரிவு கல்வெட்டியல் துறை இயக்குனர் முனிரத்தினம் கூறியதாவது: சிங்கீஸ்வரர் கோவில் செப்பேடின் படத்தை, பவானி அம்மன் கோவில் செயல் அதிகாரி பிரகாஷ் எனக்கு அனுப்பினார். அதை படித்துப் பார்த்த போது, கோவிலில் பணிபுரிந்த பிராமணர்களுக்கு, கிருஷ்ணதேவராயர் நிலம் தானம் வழங்கிய தகவல் இருந்தது. இரண்டு செப்பு இதழ்கள், ஒரு வளையத்தில் கோர்க்கப்பட்டுள்ளன. வளையத்தில் கிருஷ்ணதேவராயரின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இந்த செப்பேடில், சமஸ்கிருத மொழியில், நந்திநாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. இது, சக ஆண்டு, 1435; ஸ்ரீமுக ஆண்டு, மார்கஷிரா மாதம், 12ம் தேதி, அதாவது, 1513ம் ஆண்டு டிசம்பர் 23ல் பொறிக்கப்பட்டுள்ளது. இதில், வாசாலபடட்கா என்ற ஊர், கிருஷ்ணராயபுரம் என பெயர் மாற்றப்பட்டு தானம் அளிக்கப்பட்டுள்ளது.


ஆய்வு; இந்த ஊர், சந்திரகிரி ராஜ்யத்தில் உள்ள வாகிர நாட்டின் தோண்டிரா மண்டலத்தின் நர்முரு சிமாவில் உள்ளது. இந்த ஊரின் எல்லைகளாக, கிழக்கில் வடமங்கலம், தெற்கில் திருமங்கலம், மேற்கில் சந்துாரு, வடக்கே திருமண்யா ஆகிய கிராமங்கள் இருந்துள்ளன. இந்த ஊர் பிராமணர்களான, கம்பம்பட்டி திப்பய்யாவின் மகன் அன்னய்யா, பிசபாட்டி ஒல்லயாவின் மகன் எல்லய்யா, கந்துகுரி சூரய்யாவின் மகன் சர்வாபட்டா, மன்னப்பள்ளி வல்லய்யாவின் மகன் தெலுங்கராயபட்டா உள்ளிட்டோருக்கு, நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளோம். அப்போது, மேலும் பல தகவல்கள் வெளிவரலாம். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar