செல்வபுரம் மகாமாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2024 02:10
கோவை; கோவை செல்வபுரம் ராமமூர்த்தி சாலையில் அமைந்துள்ள மகா மாரியம்மன் - முனீஸ்வரன் கோவிலில் ஐப்பசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் மஞ்சள் காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்தில் மகாமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.