பதிவு செய்த நாள்
01
நவ
2024
10:11
பெ.நா.பாளையம்; தீபாவளி பண்டிகையையொட்டி கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சின்னதடாகம், துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள், திருவீதி உலா நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே பழைய புதூரில் உள்ள ஆதிமூர்த்தி பெருமாள் திருக்கோவிலில் தீபாவளி பண்டிகையையொட்டி அதிகாலை சிறப்பு பூஜை, பஜனை நடந்தது. சுவாமி திருவீதி உலா கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே போல கஸ்தூரி பாளையம் மகாலட்சுமி திருக்கோவிலில் சிறப்பு பஜனை மற்றும் திருவீதி உலா நடந்தது. இது தவிர, நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், அங்காளம்மன் கோவில், கொங்காளம்மன் கோவில், மாரியம்மன் கோவில், சக்தி மாரியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் மெயின் ரோடு காமாட்சி அம்மன் கோவில், அப்புலுபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இடிகரை பெருமாள் கோவில், பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளையம், சின்னதடாகம் ஆகிய இடங்களில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவில், பாலமலை ரங்கநாதர் கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், வீரபாண்டி மாரியம்மன் கோவில்களில் அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. வடமாநிலத்தவர் உள்ளிட்ட வியாபாரிகள் நேற்று புதிய கணக்குகளை ஆரம்பித்து, வியாபாரங்களை துவக்கினர்.