வடக்குப்பட்டு சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் பவித்ரோத்சவம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2024 05:11
ஸ்ரீபெரும்புதுார்; ஸ்ரீபெரும்புதுார் அருகே ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில், 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், மூன்று நாட்கள் பவித்ரோற்சவம் நேற்று துவங்கி நடந்து வருகிறது. அதன்படி, இரண்டாம் நாளான இன்று சுந்தர வரதராஜ பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, யாக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் குழு மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.