கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நவ., 15ல் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2024 05:11
பெரம்பலுார்; அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். உலகப் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழன் கங்கை நதி வரை போராடி வெற்றி பெற்றது சின்னமாக கட்டப்பட்டது.
உலக பிரதான சின்னமாக அறிவிக்கப்பட்ட கோவிலில் சிங்கமுக கிணறு, ஒரே கல்லில் ஆன நவக்கிரகம் பிரசித்தி பெற்றவை. கோவிலில் உள்ள 13.5 அடி உயரமும் 60 அடி சுற்றளவு கொண்ட பிரகதீஸ்வரர் லிங்கத்திற்கு 100 மூட்டை அரிசியால் உணவு சமைத்து அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இந்து சமய அறநிலையத் துறை மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக கமிட்டினர் கடந்த 39 ஆண்டுகளாக அண்ணா அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்தாண்டு அன்னாபிஷேகத்தையொட்டி நவ., 13ம் தேதி அன்று கணக்க விநாயகர் அபிஷேகமும் 14ம் தேதி அன்று பிரகன்ன நாயகி பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடக்க உள்ளது. நவ., 15ம் தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர் மற்றும் காஞ்சி சங்கரமட அன்னாபிஷேக விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.