வடமாநிலங்களில் சாத் பூஜை; புனித நீராடி மக்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2024 10:11
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்லநடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவானது நான்கு நாட்களுக்கு நடைபெறும். நான்காவது நாளில் நீர் நிலைகளில் கூடி மக்கள் பூஜை செய்து சூரிய பகவானை வழிபடுவர். வட இந்திய பண்டிகையான இது, வடமாநிலத்தார் அதிகம் இருப்பதால் தற்போது சென்னையிலும் பிரபலமாகி வருகிறது. சாத் பூஜையின் முதல் நாளான இன்று டெல்லியில் யமுனா நதியில் நச்சு நுரைக்கு மத்தியில் மக்கள் நீராடி வழிபட்டனர். இந்த விழாவுக்காக டில்லியில் வரும் 7ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யமுனை நதிக்கரையில் அரசின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐ.டி.ஓ., காட் பகுதியில் செய்யப்பட்டுள்ள சாத் பூஜை ஏற்பாடுகளை முதல்வர் ஆதிஷி சிங் நேற்று ஆய்வு செய்தார்.