பதிவு செய்த நாள்
05
நவ
2024
10:11
கூடலுார்; கூடலுாரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வடக்கு காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சையாக நடந்தது. கூடலுார் வடக்கு நுழைவு எல்லையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக காவல் தெய்வமாய் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் காளியம்மனுக்கு கோயில் புதுப்பிக்கும் பணி நடந்து முடிந்தது. நான்கு கால யாக பூஜைகள் நடந்தது. மங்கல வாத்தியம், கோ பூஜை, ரக்சா பந்தனம், திரவிய அபிஷேகம், துவார தோரண பூஜை, வேதபாராயணம், சன்னதி ஹோமம் நடந்தது. இதனைத் தொடர்ந்து விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் மூல ஆலயத்தில் அம்மனுக்கு மகா தீபாரதனை, சதுர்வேத பாராயணம், ராக தாள சமர்ப்பணம், மகா ஆசீர்வாதம் நடந்தது. விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி, பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், முன்னாள் எம்.பி., செல்வேந்திரன், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., லட்சுமணன், தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை, நகராட்சித் தலைவர் பத்மாவதி, முன்னாள் நகர செயலாளர் மயில்வாகனன், கம்பம் நகர செயலாளர்கள் வீரபாண்டி, பால்பாண்டி, கோயில் விழா கமிட்டியினர் பி.ராமர், கோபி, கவாஸ்கர் கலந்து கொண்டனர். கோயில் கட்டடப் பணி மற்றும் கும்பாபிஷேக ஏற்பாட்டினை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் தனி நேர்முக உதவியாளர் ராசா செய்திருந்தார்.