பதிவு செய்த நாள்
05
நவ
2024
05:11
வால்பாறை; வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷன். இங்குள்ள மகாராஜா மாடசுவாமி, ஸ்ரீ கருப்பசுவாமி, பேச்சியம்மாள், இசக்கியம்மாள் கோவிலின் மஹாகும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, 2ம் தேதி மாலை, 4:00 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, வாஸ்துசாந்தி, கிராமசாந்தி, மிருத்சங்கிரணம், மாலை, 6:00 மணிக்கு யாகவேள்வி, கணபதி ஹோமம், ஸ்ரீருத்ரேஹாமம், புரணஷிதி நடைபெற்றது. இரவு 8:00 மணிக்கு ஸ்வர்ண, யந்திர, ரத்தின ஸ்தாபனம், சுவாமி பிரதிஷ்டை நடந்தது. விழாவில் நேற்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜையும், வேள்வி பூஜை, மூலமந்திரம், ஹோமம், தீபாரதணை நடந்தது. காலை, 9:00 மணிக்கு நாடிசந்தனம், யாத்ரா தானத்தை தொடர்ந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக கோவிலை வலம் வந்த பின், காலை, 10:00 மணிக்கு விமான கலசத்திற்கு மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாடசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.