Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அறம்வளர்த்தீஸ்வரர் கோவிலில் ... கந்த சஷ்டி விழா; கூடல் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம் கந்த சஷ்டி விழா; கூடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்; கந்த சஷ்டி விழா நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்; கந்த சஷ்டி விழா நிறைவு

பதிவு செய்த நாள்

08 நவ
2024
03:11

அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


திருமுருகன் பூண்டியில் திருமுருகநாதர் ஸ்வாமி கோவிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். கொங்கேழு சிவஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்ற விளங்கும் திருமுருகன் பூண்டி திருமுருக நாதர் ஸ்வாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா,கடந்த இரண்டாம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. திருக்கல்யாண விழாவை முன்னிட்டு திருமுருகநாத ஸ்வாமி கோவிலில் தினசரி காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஸ்வாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரமும் நடைபெற்றது. நேற்று முருகப்பெருமான் 4 வீதிகளும் வலம் வந்து சூரனை வதம் செய்தார். அதனைத் தொடர்ந்து இன்று காலை திருக்கல்யாணத்திற்காக திருமுருகன் பூண்டி கோவில் வளாகத்தில் திடல் அமைத்து வள்ளி தெய்வானை உடனமர் சண்முகநாதர் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் சண்முகநாதர் வள்ளி தெய்வானைக்கு திருமாங்கல்யம் கட்டினார். அதன் பின்னர் சிறப்பு மஹா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் அர்ச்சனை தூவி அரோகரா கோஷத்தோடு சண்முகநாதரை வழிபட்டனர். பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவத்தில் பக்தர்கள் மொய்ப்பணம் எழுதுதல், பாத காணிக்கையடுத்து வெள்ளி யானை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சண்முக நாதர் எழுந்தருளி திருவீதி உலா கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவ விழாவை முன்னிட்டு திருமுருகன் பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar