Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் ரோப் கார் திட்டம்; 2.90 ... ஸ்ரீஆதிசங்கரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி வைத்தார் சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீஆதிசங்கரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா; திருக்கல்யாணம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா; திருக்கல்யாணம் விமரிசை

பதிவு செய்த நாள்

09 நவ
2024
07:11

சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் கந்த சஷ்டி விழா, கடந்த 1ம் தேதி வரசித்தி விநாயகரின் மூஷிக வாகனப் புறப்பாட்டுடன் துவங்கியது.நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் நடந்தது. அதைத் தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சண்முகப் பெருமாள், மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


இந்த நிலையில், விழாவின் இறுதி நிகழ்வாக திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு மாலை சீர்வரிசை புறப்பாடு தொடர்ந்து, சர்வ அலங்காரத்துடன் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் மணமேடைக்கு எழுந்தருளி ஊஞ்சலில் அமர்ந்தார். தொடர்ந்து, சுவாமிக்கு பாலும், பழமும் வழங்கப்பட்டது. பின், மாங்கல்ய தாரணம் நடந்தது. அடுத்து, பூர்ணாஹுதி நிறைவு பெற்று, ரக்‌ஷை சார்த்தும் நிகழ்வை தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து நடந்தது. மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று முதல், 12ம் தேதி வரை, இரவு 7:00 மணிக்கு முறையே, வடபழனி ஆண்டவர் மங்களகிரி விமானப் புறப்பாடு; சொக்கநாதர், மீனாட்சி அம்மன் பஞ்சமூர்த்தி புறப்பாடு; வடபழனி ஆண்டவர் புறப்பாடு ஆகியவை நடக்கிறது. 


கபாலீஸ்வரர் கோவில்; மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி விழாவில், நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. அதைத் தொடர்ந்து, நேற்று காலை முதல் இரவு வரை ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. நேற்று இரவு, சிங்காரவேலர் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது. இதைத்தொடர்ந்து, யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar