அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜராஜ சோழன் ஐப்பசி சதயப் பெருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2024 06:11
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தேவாரத்தை மீட்டெடுத்து திருமுறைகண்ட சோழனான இராஜராஜ சோழ மன்னனின் 1039வது ஐப்பசி சதயப்பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சபா மண்டபத்தில் தேவாரத்தை மீட்டெடுத்து திருமுறை கண்ட சோழனான இராஜராஜ சோழ மாமன்னனின் 1039 வது ஐப்பசி சதயப்பெருவிழா நடைபெற்றது. அதில் இராஜராஜ சோழனை போற்றும் விதமாக சம்பந்தர், அப்பர், சுந்தரர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் முழுவதும் ஓதி, அகத்தியர் தேவாரத் திரட்டு முழுவதும் பண்ணொன்ற விண்ணப்பித்தலை திருமுறை கலாநிதி கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் ஓதுவ மூர்த்திகள் மற்றும் பக்க இசைக் கலைஞர்கள் பண்ணிசை மரபோடு முற்றோதுதல் நடைபெற்றது. முன்னதாக திருமுறைகண்ட விநாயகர், நால்வர் பெருமக்களுக்கு அபிஷேகம், அலங்காரம், மஹா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அரன் பணி அறக்கட்டளையினர் ஏற்பாட்டில் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் ,அறங்காவலர் குழுவினர் ஆகியோர் செய்தனர்.