விநாயகருக்கு சிதறுகாய் உடைத்தும், பசுவிற்கு பழம் கொடுத்தும் ஆரம்பிக்கும் செயல் வெற்றி பெறும். கோயில் வாசலில் உள்ள விநாயகரை ‘சவுபாக்கிய விநாயகர்’ என்பர். சங்கடஹர சதுர்த்தி, விசேஷ நாளில் சாற்றப்படும் அருகம்புல் மாலையை சிலர் குப்பையில் போட்டு விடுவார்கள். அப்படி செய்யாமல் அதை காய வைத்து பொடியாக்கி வீட்டில் வழிபாடு செய்யும்போது துாபம் இட்டால் எதிர்மறை ஆற்றல் மறையும். இதை வியாபாரம் செய்யும் இடத்தில் செய்தால் வியாபாரம் வளர்ச்சி பெறும்.