இன்று பிரதோஷம்; மாலை 4.30 மணி முதல் 6 மணி சிவ தரிசனம் செய்வது சிறப்பை தரும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2024 04:11
பிரதோஷ வேளையில் சிவனை வழிபட சகல துன்பங்களும் தீரும். நந்தியம் பெருமானுக்கும் அபிஷேகம் செய்து, வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் மீண்டும் எழுந்து ஆனந்தத் தாண்டவம் ஆடியது ஒரு பிரதோஷ தினம். இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது அதிலும் குறிப்பாக சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காரணம் இந்த நாளில் பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவன் சந்நிதியில் அவரை வழிபட எழுந்தருளியிருப்பார்கள் என்றும் அந்த நாளில் சிவன் சந்நிதியில் வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே ஆசீர்வதிக்கும் என்பதும் நம்பிக்கை. இன்று சிவனை நினைத்தாலும் போதும் நற்பலன்கள் உண்டாகும்!