பதிவு செய்த நாள்
12
நவ
2024
04:11
சென்னை; திருவான்மியூர் ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார்.
பெங்களூரில் இருந்து, அக்.,26ல், காஞ்சிபுரம் வருகை தந்த சன்னிதானம், 27, 28 தேதிகளில், ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீஆதி காமாட்சி அம்மன், ஸ்ரீஉலகளந்த பெருமாள், ஸ்ரீகைலாசநாதர், ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், குமரகோட்டம் ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆகிய ஏழு கோவில்களில் தரிசனம் செய்தார். தொடர்ந்து, 26ம் தேதி இரவு முதல், 28ம் தேதி இரவு வரை காஞ்சி புரம் சாலை தெருவில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில் தங்கி, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். அக்., 28 இரவு சென்னை வந்த சன்னிதானம், மயிலாப்பூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுதர்மா இல்லத்தில் தங்கி, பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். சென்னையில் உள்ள கிளை மடங்கள், கோவில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
ஜய யாத்திரையின் 15வது நாளான நேற்று, சுதர்மா இல்லத்தில், பக்தர்களுக்கு சன்னிதானம் ஆசி வழங்கினார். இன்று காலை திருவான்மியூர் சென்ற சன்னிதானம், ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடக்கும், ஸ்ரீவித்யாதீர்த்த பவுண்டேஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு நடந்த ஸ்ரீஆதிசங்கரர் தின விழாவில், அருளுரை வழங்கினார். ஸ்ரீஆதிசங்கரர் தின விழாவில், வெளியிடப்பட்ட ஸ்ரீஆதிசங்கரர் தினம் - ஓர் தொகுப்பு நூலை, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட சன்னிதானம் ஸ்ரீவிதுசேகர பாரதீ சுவாமிகளிடம் இருந்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். மாலை 5:00 மணிக்கு கோடம்பாக்கம்மீனாட்சி கல்லுாரிக்கு விஜயம் செய்கிறார். அங்கு மாலை 6:00 மணிக்கு நடக்கும் குரு வந்தனம் நிகழ்ச்சியில் பங்கேற்று, பக்தர்களுக்கு அருளுரை வழங்குகிறார். மீனாட்சி கல்லுாரியில்இன்றும், நாளையும்தங்கும் சன்னிதானம், நாளை காலை அங்குள்ள ஸ்ரீசாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். மாலை 4:00 மணிக்கு, சென்னை விஜய யாத்திரையை நிறைவு செய்து, திருப்பதி புறப்பட்டுச் செல்ல இருப்பதாக,மடத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.