பதிவு செய்த நாள்
13
நவ
2024
01:11
அவிநாசி; பழங்கரை பகவதி தேவநாயகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அவிநாசி வட்டம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட ஆயி கவுண்டன்பாளையம் ரோட்டில் எழுந்தருளியுள்ள பகவதி தேவநாயகி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதற்காக கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் திருவிளக்கு ஏற்றுதல், விநாயகர் பூஜை,விமான கலசம் நிறுவுதல், கன்னிமார், கருப்பராயர் ஸ்வாமி, நாகலிங்கேஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மருந்து சாத்துதல் ஆகியவற்றுடன் முதல் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை திருப்பள்ளி எழுச்சி,பேரொளி வழிபாடு, மலர் அர்ச்சனை ஆகியவை நடைபெற்றது. அதன் பின்னர், பகவதி தேவநாயகி அம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை தொடர்ந்து அபிஷேகம்,அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் விழா கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.