புதுச்சேரி: முதலியார்பேட்டையில் உள்ள வன்னியப் பெருமாள் கோவிலில் திருப்பவித்ரோத்சவம் நேற்று முன்தினம் நடந்தது.விழா, கடந்த 21ம் தேதி காலை இரவு 7 மணிக்கு விஷ்வக்சேனர் ஆராதனையுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் 91 பூஜைகள், மாலையில் 91 பூஜைகள் என மொத்தம் 365 பூஜைகளும், 5 கால ஹோமங்களும் நடந்தது.நேற்று முன்தினம் கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு பெரிய திருமஞ்சனம், மகா கும்பப்ரோஷனம் நடந்தது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான தனி அதிகாரி சீனுவாசன் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.