பதிவு செய்த நாள்
14
நவ
2024
12:11
அசுவினி; திறமையாக செயல்படக்கூடிய ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, கார்த்திகை மாதம் நன்மைகள் நிறைந்த மாதம். கேது இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகளை நீக்குவார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்களை போக்குவார். வழக்கு விவகாரம் சாதகமாகும். டிச 3 வரை சுக்கிரனால் தன வரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னை நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. சனி பகவானால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானம் அதிகரிக்கும். தொழில், உத்தியோகம், உடல்நிலை என அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. சூரிய பகவான் செயல்களில் சங்கடத்தையும் உடலில் ஏதேனும் பிரச்னைகளையும் தோற்றுவிப்பார், மனம் சோர்வடையும். முயற்சி எல்லாம் வெற்றியாகும். மாணவர் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: நவ. 30.
அதிர்ஷ்ட நாள்: நவ. 16, 18, 25, 27. டிச. 7, 9,
பரிகாரம்: பைரவரை வழிபட நன்மை அதிகரிக்கும்.
பரணி; துணிச்சலாக செயல்படும் உங்களுக்கு நினைப்பதை சாதிக்கும் திறமை எப்போதும் இருக்கும். பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி பகவான் பொருளாதார நெருக்கடிகளை விலக்குவார். உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனையாகும். வியாபாரத்தில் இருந்த தேக்கம் நீங்கும். பணியாளர் ஒத்துழைப்பு கூடும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். நினைத்ததை சாதிக்கும் நிலை உருவாகும். சூரிய பகவான் மாதம் முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. அரசு ஊழியர்கள் அதிகாரியின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியதாக இருக்கும். தடைகளும் தாமதமும் ஏற்படும். ஒரு சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத நெருக்கடி தோன்றினாலும் மருத்துவத்தால் குணமடைவீர். கேது பகவான் அனைத்து சங்கடங்களில் இருந்தும் பாதுகாப்பார். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து வெளியில் கொண்டு வருவார். சிறு வியாபாரிகள் முதலீடுகள் செய்வது நல்லது. உங்கள் நட்சத்திரநாதனால் வரவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைபடும். வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும். அதன் வழியாக லாபம் கூடும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 1, 2.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 24, 27. டிச. 6, 9, 15.
பரிகாரம் சனீஸ்வரரை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
கார்த்திகை 1 ம் பாதம்; உறுதியுடன் செயல்படும் உங்களுக்கு கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். சூரிய பகவான் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் நிதானம் வேண்டும். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. அரசு விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பார்த்த அனுமதி, சலுகை கிடைக்க தாமதமாகும். மனம் சோர்வடையும். கேது பகவான் உங்களைப் பாதுகாப்பார். உங்களது வேலைகளையும் முடித்துக் கொடுப்பார். தடைகளை நீக்கி வைப்பார். தொழிலில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடிகளை குறைக்கச் செய்வார். வழக்குகளில் சாதகத்தை ஏற்படுத்துவார். சனி பகவான் வரவை அதிகரிப்பார். அதனால் துணிச்சலுடன் செயல்படுவீர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். பணிபுரியும் இடத்திலும் ஆதரவாளர்கள் உங்களை வழி நடத்துவர். சுக்கிரனும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். புதிய இடம், வீடு வாங்கும்போது பத்திரத்தை நன்கு படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பதவி கிடைக்கும் மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பதுடன் நட்புகள் விஷயத்திலும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச. 2.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 19, 27, 28. டிச. 1, 9, 10
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.