Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : ஐப்பசி ராசி பலன் மேஷம்: கார்த்திகை ராசி பலன் மேஷம்: கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மீனம் : ஐப்பசி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனம் : ஐப்பசி ராசி பலன்

பதிவு செய்த நாள்

15 அக்
2024
05:10

மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம் ..வாழ்க்கையை புரிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் சிந்தித்து செயல்பட வேண்டிய மாதம். ராசிநாதன் வக்ரமடைந்திருப்பதால் இதற்கு முன்பிருந்த சங்கடங்கள் இல்லாமல் போகும். நெருக்கடி நீங்கும். மனக்குழப்பம் விலகும். அதே நேரத்தில் மற்ற கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு எதிர்மறையாக இருக்கும். ஒவ்வொரு செயலிலும் நிதானமாக, யோசித்து அடி எடுத்து வைக்க வேண்டும். ஜென்மத்தில் சஞ்சரிக்கும் ராகு தவறான பாதைக்கு அழைத்துச் செல்லலாம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது நட்புகளால் குடும்பத்தில் குழப்பங்களை உண்டாகும். சூரியனால் நெருக்கடி அதிகரிக்கும். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் செலவு அதிகரிக்கும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். பணிபுரியும் இடத்தில் வேலையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க கூடாது. குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது இக்காலத்தில் நன்மையாக இருக்கும். தவறான நட்புகளை விட்டு விலகுவது பெரும் சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியாகும். நவ 8 வரை சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வரவு அதிகரிக்கும். எல்லாவற்றையும் சமாளிக்கும் சக்தி உண்டாகும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது இந்த நேரத்தில் அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.

சந்திராஷ்டமம்: அக் 31

அதிர்ஷ்ட நாள்: அக் 21, 30. நவ 3, 12.

பரிகாரம்: முன்னோரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.


உத்திரட்டாதி: நீதி நேர்மை நியாயம் அந்தஸ்து கௌரவம் என்ற வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் உங்கள் நட்சத்திர நாதன் சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் செலவுகள் பல வழியிலும் அதிகரிக்கும். அதனால் வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம். உங்கள் ராசிநாதன் வக்ரம் அடைந்திருப்பதால் சிந்திக்காமல் செயல்படக்கூடிய நிலை ஏற்படும். அதன் காரணமாக நெருக்கடிக்கு ஆளாக நேரும். கேதுவால் வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்படும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். ஒரு சிலரை சட்டத்திற்குப் புறம்பான வேலைகளிலும் ஈடுபட வைப்பார். செவ்வாய் சாதகமாக இல்லாததால் எதிர்பார்த்த இடத்தில் இருந்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் நிலையில் சங்கடம் தோன்றும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். சூரியன் சஞ்சரிப்பதால் செய்து வரும் தொழிலில் பின்னடைவு ஏற்படும். ஒரு சிலருக்கு அரசு வழியில் அபராதம் கட்ட நேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளால் சங்கடம் தோன்றும். வேலையில் பிரச்னை அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களும் எதிராக மாறக்கூடிய நிலை ஏற்படும். பெரும்பாலான கிரகம் இந்த மாதத்தில் எதிர்மறையாகவே கிரகம் சஞ்சரிப்பதால் நிதானம் அவசியம். புத பகவானால் எந்த ஒன்றிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதித்துக் கொள்வீர். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். கேட்டிருந்த இடத்திலிருந்து பணம் வரும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். உங்கள் எண்ணம் ஈடேறும். மாணவர்கள் படிப்பில் முழுமையாக கவனம் செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டமம்: அக் 31. நவ 1.

அதிர்ஷ்ட நாள்: அக் 21, 26, 30. நவ 3, 8, 12.

பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.


ரேவதி:சூழ்நிலை அறிந்து செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஐப்பசி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். பெரும்பாலான கிரகம் இந்த மாதத்தில் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் இதுவரை எளிதாக நடந்து வந்த வேலை கடும் முயற்சிக்குப்பின் நிறைவேறும். புத பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பது நடந்தேறும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலை விரிவு செய்யும் வேலையில் ஒரு சிலர் ஈடுபடுவீர். சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். பண வரவு அதிகரிக்கும். இருந்தாலும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு உங்கள் மனதில் ஆசைகளை உண்டாக்குவார். அதன் காரணமாக சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரித்து வருவதால் தம்பதிகளுக்குள் நெருக்கடி உண்டாகும். வீண் பிரச்னை பெரிதாகும். பிற நபர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் ஏற்படும். தேவையற்ற நபர்களை உங்கள் நட்பில் இருந்து விலக்கி வைப்பது நல்லது. சூரியனால் உடல் ரீதியாக சில சங்கடம் தோன்றலாம். இக்காலத்தில் அனைத்திலும் கவனம் அவசியம். செய்து வரும் தொழிலில், பார்த்து வரும் உத்தியோகத்தில் எதிர்பாராத நெருக்கடி, சட்ட சிக்கல் உண்டாவதற்கு வாய்ப்புண்டு.  சனி பகவான் நவ 4 முதல் வக்ர நிவர்த்தி அடைவதால் வீண் செலவும் தேவையற்ற அலைச்சலும் உண்டாகும். இக்காலகட்டங்களில் நேரம் காலம் அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

சந்திராஷ்டமம்: நவ 1, 2.

அதிர்ஷ்ட நாள்: அக் 21, 23, 30. நவ 3, 5, 12, 14.

பரிகாரம்: திருப்பதி பெருமாளை வழிபட வளம் உண்டாகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar