பதிவு செய்த நாள்
14
நவ
2024
12:11
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; அறிவும் துணிவும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் அதிர்ஷ்டமான மாதம். குரு பகவான் வக்ரம் அடைந்துள்ள நிலையில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி பகவானால் செல்வாக்கு உயரும். பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். போட்டியாளர் பலமிழப்பர். இழுபறி வழக்கு சாதகமாகும். வேண்டுதல் நிறைவேறி கோயில் வழிபாட்டை மேற்கொள்வீர்கள். மற்றவர்களால் கவனம் சிதறலாம். நல்ல வாய்ப்புகளை இழக்க வேண்டிய நிலை வரும். செவ்வாயால் குடும்பத்திற்குள் நெருக்கடி உண்டாகும். டிச 4 முதல் உங்கள் ராசிநாதன் புதனும் வக்ர நிவர்த்தி அடைவதால் சிந்தித்து செயல்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்டிருந்த வேலை நடக்கும். வெளிநாட்டு தொடர்பு சாதகமாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. விவசாயிகள் விளைச்சலில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
சந்திராஷ்டமம்: டிச. 4, 5.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 9, 14.
பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட நன்மைகள் உண்டாகும்.
திருவாதிரை; நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதம். மாதம் முழுவதும் சூரிய பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை நடக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகம் ஆகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். சனி பகவானால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும் வருமானம் பல வழியிலும் வரத் தொடங்கும் புத்திசாலித்தனம் வெளிப்படும். எவ்வளவு நெருக்கடி ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். குடும்பத்தினர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விரும்பிய வாகனம் வாங்குவீர். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். பெரிய மனிதர்கள் ஒத்துழைப்புடன் வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 5, 6.
அதிர்ஷ்ட நாள்: நவ. 22, 23, டிச. 4, 13, 14.
பரிகாரம்: துர்கையை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
.....................
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்
பிறர் மன நிலையை உணர்ந்தும் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம். குரு பகவான் வக்ரமாகியிருப்பதால் வீண் செலவு கட்டுப்படும். அலைச்சல் குறையும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாதம் முழுவதும் சூரிய பகவான் உங்களுக்கு முன்னேற்றமான பலன்களை வழங்குவார். எல்லா வகை எதிர்பார்ப்பும் நிறைவேறும். திறமை வெளிப்படும். வருமானம் அதிகரிக்கும். எதிர்ப்புகள் இல்லாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பாக்ய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை 3, 6, 11 ம் இடங்களுக்கு உண்டாவதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பாதிப்பு விலகும். வம்பு, வழக்கு சாதகமாகும். வருமானம் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும். தெய்வ அருளும், பெரிய மனிதர்களின் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய பாதைத் தெரியும். தடைபட்ட வேலை நடக்கும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் ராசிநாதன் வக்ர நிவர்த்தி அடைவதால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடும் வலிமை உண்டாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சிறு வியாபாரிகள், உழைப்பாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் சிறு சிறு நெருக்கடி ஏற்பட்டாலும் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: டிச. 6.
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 23, 30. டிச. 3, 5, 12, 14.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மை அதிகரிக்கும்.
...................