பதிவு செய்த நாள்
14
நவ
2024
12:11
மகம்: எங்கும் முதன்மையை விரும்பும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். குரு வக்ரம் அடைந்திருப்பது நல்லது என்றாலும் இக்காலத்தில் அவருடைய பார்வைகள் இல்லாமல் 2, 4, ம் இடத்தில் சஞ்சரிக்கும் கிரகம் பலம் பெறுகிறது. இதுவரை குடும்பத்திற்குள் கேது பகவான் நெருக்கடியை உண்டாக்குவார். பண வரவிலும் தடையுண்டாகும். கொடுத்த வாக்கையும் காப்பாற்ற முடியாமல் போகும். தாய்வழி உறவுகளால் அடைந்து வந்த நன்மையில் மாற்றமுண்டாகும். வேலை பளு கூடும். உத்யோகத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம். உங்கள் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலை நடந்தேறும். பொன் பொருள் சேரும். நெருக்கடி விலகும். புதன் உங்கள் நிலையை உயர்த்துவார். சிந்தித்து செயல்பட வைப்பார். பணிய வேண்டிய இடத்தில் பணிந்து உங்கள் வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வரவு செலவில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் இருக்கும் நெருக்கடி பிற்பகுதியில் நீங்கும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: டிச. 9.
அதிர்ஷ்ட நாள்: நவ. 16, 19, 25, 28. டிச. 1, 7, 10.
பரிகாரம்: நவக்கிரக வழிபாட்டால் நன்மை உண்டாகும்.
பூரம்: நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் செவ்வாய். சப்தம ஸ்தானத்தில் சனி. அஷ்டம ஸ்தானத்தில் ராகு. தன, குடும்ப ஸ்தானத்தில் கேது என்று சஞ்சரித்தாலும், நட்சத்திர நாதனும், சகாய, ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் சஞ்சார நிலை டிச. 3 வரை சாதகமாக இருப்பதால் வருமானம் உயரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் நெருக்கடி இல்லாமல் போகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். செவ்வாய் வக்ரம் அடைவதால் செலவு குறையும். வீண் விரயம் இல்லாமல் போகும் என்றாலும், சுக ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் ராசிநாதனுக்கும், உங்கள் ராசிக்கும் சனி பகவானின் பார்வை உண்டாகி இருப்பதால் கவனமாக செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் இக்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். நேரத்திற்கு சாப்பிடுவது, உறங்குவது நன்மையாகும். டிச. 4 முதல் புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். அவசியமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை வரமிது.
சந்திராஷ்டமம்: டிச. 10.
அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 24, 28. டிச. 1, 6, 15.
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 1 ம் பாதம்; எதிலும் தனித்துவத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். 4 ம் இடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதன் சூரியன், சனி பகவானின் பார்வைக்கு ஆட்பட்டிருப்பதால் உடல் நிலையில் சிறு சிறு சங்கடம் ஏற்படும். இனம் புரியாத பயம் தோன்றி மறையும். உங்கள் ராசிக்கும் சனி பகவான் பார்வை இருப்பதால் உடல்நிலையில் கவனம் செலுத்துவதுடன், நட்பு வட்டத்தில் இணக்கமாக செல்வது இக்காலத்தில் நன்மையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை கொள்வது அவசியம். கூட்டுத்தொழிலில் சில சங்கடம் தோன்றும் என்றாலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சுக்கிரனால் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். தேவையான அளவிற்கு வருமானம் வரும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். நெருக்கடி நீங்கும். மாதத்தின் பிற்பகுதியில் புதன் பகவான் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் புத்திசாலித்தனமாக செயல்படுவீர். எந்தவிதமான நெருக்கடி வந்தாலும் அதை சமாளித்து விடக்கூடிய சக்தி உண்டாகும். இக்காலத்தில் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. ராகுவும், கேதுவும் குடும்பத்திற்குள் நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகள் இந்த மாதத்தில் மேற்கொள்ள வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். மாதத்தின் முற்பகுதியில் மருத்துவ செலவுகள் கூடும். தேவையற்ற செலவு ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: டிச. 11.
அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 28. டிச. 1, 10.
பரிகாரம்: சனீஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.