பதிவு செய்த நாள்
14
நவ
2024
12:11
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதம். சூரியனால் இதுவரை தடைபட்டிருந்த வேலை நடக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். கடந்த கால நெருக்கடி விலகும். உத்யோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். திட்டமிட்ட வேலைகளை ஒவ்வொன்றாக நடத்தி முடித்து ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். ராகுபகவானால் புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவர். அவர்களால் ஆதாயம் கூடும். ஒரு சிலருக்கு வெளிநாட்டு தொடர்பு ஏற்படும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். கேது சஞ்சரித்தினால் வாழ்க்கையில் ஒரு சில புதிய அனுபவங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு மாதத்தின் முற்பகுதியில் யோகமாகவும் பிற்பகுதியில் சிறு சிறு சங்கடங்களும் ஏற்படும் என்பதால் கவனமாக செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: டிச. 11.
அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 23, 28. டிச. 1, 5, 10, 14.
பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
அஸ்தம்; எந்த வேலை ஆனாலும் அதில் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் யோகமான மாதம். சனி பகவான் இதுவரையில் உங்களுக்கிருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த மாற்றத்தை அடைவீர்கள். சூரிய பகவானும் உங்கள் முயற்சிகளில் வெற்றிகளை உண்டாக்குவார். திட்டமிட்டிருந்த வேலை எல்லாம் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வயது முதிர்ச்சியின் காரணமாக நோய் நொடிக்கு ஆளாகி இருந்தவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். வாழ்க்கைத் துணையாலும், நண்பர்களாலும் உங்கள் வேலை நடந்தேறும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். விவசாயிகளுக்கு மாதத்தின் முற்பகுதி சாதகமாக இருக்கும். பிற்பகுதியில் கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் மாதம் முழுவதும் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: டிச. 12.
அதிர்ஷ்ட நாள்: நவ. 20, 23, 29. டிச. 2, 5, 11, 14.
பரிகாரம்: வீரட்டேஸ்வரரை வழிபட அனைத்திலும் வெற்றி உண்டாகும்.
சித்திரை 1, 2 ம் பாதம் ; தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் செவ்வாய் நீங்கள் மேற்கொள்ளும் செயல்களை எல்லாம் லாபமாக்குவார். முடங்கியிருந்த தொழில்களை மீண்டும் இயங்க வைப்பார். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். எதிர்பார்த்த வரவை வழங்குவார். உங்கள் வாழ்வில் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய் வக்ரமானாலும் மாதம் முழுவதும் சூரியனும், சனி பகவானும் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை உண்டாக்குவார்கள். டிச. 3 முதல் சுக்கிரனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் வருவாய் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் பணியாளர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். சிறு நிறுவனங்களில் வேலைச் செய்வோரின் விருப்பம் பூர்த்தியாகும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். உங்கள் திறமை வெளிப்படும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு இக்காலத்தில் படிப்பில் முழுமையான அக்கறை வேண்டும்.
சந்திராஷ்டமம்: டிச. 13.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 5, 9, 14.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.