பதிவு செய்த நாள்
14
நவ
2024
12:11
விசாகம் 4 ம் பாதம்; தைரியத்துடன் வாழ்க்கையில் வெற்றி பெற்று வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். பவுர்ணமி யோகத்துடன் பிறக்கும் இந்த மாதத்தில், உங்கள் முயற்சியின் காரணமாக நீங்கள் மேற்கொள்ளும் வேலைகள் வெற்றி அடையும்.
லாபகரகனால் வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். என்றாலும், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சூரியனால் உடல் நிலையில் கவனமாக இருப்பது அவசியம். வேலைகளில் படபடப்பும், யோசிக்காமல் செயல்படக்கூடிய நிலையும் இருக்கும். அதன் காரணமாக எதிர்பார்ப்பு இழுபறியாகலாம். சுக்ரனின் சஞ்சாரம் மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பண வரவிற்கும், சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது. உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். பொன் பொருள் சேரும். புதிய வாகனம் வாங்கிட மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் உங்கள் ராசிநாதன் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற வருமானத்தை வழங்குவார்.
சந்திராஷ்டமம்: நவ. 18.
அதிர்ஷ்ட நாள்: நவ. 21, 27, 30. டிச. 3, 9, 12.
பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வணங்கி வர நன்மை உண்டாகும்.
அனுஷம்; அடுத்தவர் நலனில் அக்கறையும் கொண்டு துணிச்சலுடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நட்சத்திரநாதன் சனி பகவான் உடல்நிலையில் சிறு சிறு சங்கடங்களை ஏற்படுத்துவார். வேலை பளுவை அதிகரிப்பார். பொறுப்பாக செயல்பட வைப்பார். நினைத்த வேலைகளை உடனே செய்து கொள்ள முடியாத அளவிற்கு சூழ்நிலை உண்டாகும். 6 ம் இடத்திற்கு சனி பகவானின் பார்வை கிடைப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து விடக்கூடிய சக்தி உண்டாகும். எதிர்ப்பு ஏற்பட்டாலும் அவற்றை இல்லாமல் செய்வீர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வழக்கில் சாதகம் உண்டாகும். ராசிக்குள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஜீவனாதிபதி சூரியனுக்கும் சனி பகவானின் பார்வைகள் உண்டாவதால் செய்து வரும் தொழிலில் கவனம் வேண்டும். புதிய முதலீடுகள் செய்வதற்கு முன்பாக பலமுறை யோசிக்க வேண்டும். அரசு பணியில் இருப்பவர்கள் இக்காலத்தில் நேர்மையாக செயல்படுவது நன்மையாக இருக்கும். இல்லையெனில் சட்ட சிக்கல்களுக்கு ஆளாக வேண்டி வரும். அரசியல்வாதிகள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நன்மையாகும். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்த வேண்டும். வயதானவர்கள் உடல் நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இக்காலத்தில் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனத்தை செலுத்துவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: நவ. 18, 19.
அதிர்ஷ்ட நாள்: நவ. 17, 26, 27. டிச. 8, 9.
பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வருவது நல்லது.
கேட்டை; புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய மாதம். உங்கள் நட்சத்திரநாதன் டிச. 4 வரை வக்ரமாக இருப்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். வரவு இழுபறியாகும். நினைத்த வேலைகளை உடனடியாக நடத்திக் கொள்ள முடியாமல் போகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேது பகவான் நன்மைகளை அதிகரிப்பார். வருமானத்திற்கு வழிவகுப்பார். மாதம் முழுவதும் சுக்ர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் சனிபகவானால் தாயாரின் நலனிலும் உங்கள் நலனிலும் கவனமாக இருக்க வேண்டும். புதிய சொத்துகள் வாங்கும்போது வில்லங்கம் பார்த்து வாங்குவது நன்மையாக இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது நன்றாக படித்துப் பார்ப்பது அவசியம். ஏதேனும் சிறுசிறு சங்கடங்கள் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் என்பதால், ஒவ்வொன்றிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவானின் பார்வைக்கு ஆட்பட்டிருப்பதால் தொழில் சில தடை, வருமானத்தில் தடை என ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதனால், முதலீடுகளின் கவனம் வேண்டும். செய்துவரும் வியாபாரத்தில் கவனம் வேண்டும். பிறரை அனுசரித்துச் செல்வதும், உத்யோகம் பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகள் உத்தரவுகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதும் நன்மையாகும். மாதத்தின் பிற்பகுதி உங்களுக்கு யோகமாக இருக்கும். தெளிவாக செயல்படுவீர்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். இடையில் இருந்த சங்கடம் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: நவ. 19, 20.
அதிர்ஷ்ட நாள்: நவ. 18, 23, 27. டிச. 5, 9, 14.
பரிகாரம்: நரசிம்மரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.