பதிவு செய்த நாள்
14
நவ
2024
12:11
மூலம்: வழிகாட்டியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் முன்னேற்றமான மாதம். இதுவரையில் இருந்த நெருக்கடி ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். சனி பகவான் உங்கள் செயல்களை எல்லாம் ஆதாயமாக்குவார். நினைப்பதை எல்லாம் நடத்தி வைப்பார். தடைபட்டிருந்த வேலை ஒவ்வொன்றும் நடந்தேறும். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதன் வக்ரமடைந்திருப்பதும் யோகமான நிலை. தொழிலில் முன்னேற்றமும், குடும்பத்தில் நிம்மதியும் உண்டாகும். உங்கள் நட்சத்திர நாதன் கேது சஞ்சரித்து வருவதால் செய்து வரும் தொழிலில் அதிகபட்ச அக்கறை தேவை. பார்த்து வரும் உத்யோகத்தில் நியாயமாக செயல்படுவதால் நன்மைகள் உண்டாகும். சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களுக்கு பிரச்னை ஏற்படும். சனிபகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் செயல்பாடுகளும் நியாயமாக இருக்கும். சுக ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்து வருவதால் ஆசைகள் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளில் கவனம் செலுத்துவதால் உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் மாதம் முழுவதும் படிப்பில் அதிகபட்ச அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சந்திராஷ்டமம்: நவ. 20, 21.
அதிர்ஷ்ட நாள்: நவ. 16, 25, 30. டிச. 3, 7, 12.
பரிகாரம்: கணபதிக்கு அருகம்பும் மாலை சார்த்தி வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
பூராடம்; திட்டமிட்ட வழியில் சென்று, நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு பிறக்கும் கார்த்திகை மாதம் நன்மையான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் சுக்ர பகவான் மாதம் முழுவதும் உங்களுக்கு யோகமான பலன்களை வழங்குகிறார். எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பத்தில் நிம்மதி நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சனி பகவானால் வேலைகள் எல்லாம் நினைத்தபடி நடக்கும். தடை இல்லாமல் வெற்றி பெறும் காலம். அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் விவசாயிகள் விளைச்சலில் கவனம் வேண்டும். உடல் நிலையில் கவனம் தேவை. பூர்வ புண்ணிய, பாக்ய, விரய ஸ்தானங்களுக்கு பார்வை உண்டாவதால் குடும்பம், பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. தந்தையின் உடல் நிலையில் கூடுதல் கவனம் தேவை. வரவு செலவுகளில் கவனமாக இருப்பது நன்மையாகும். புதிய முயற்சிகள், ஒப்பந்தங்களில் கூடுதல் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் நன்மைகள் கூடும். பணி புரியும் இடத்தில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புதன் பகவான் விரய ஸ்தானத்தில் வக்ரமடைந்திருப்பதால் மாணவர்கள் படிப்பில் முழுமையான அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: நவ. 21, 22.
அதிர்ஷ்ட நாள்: நவ. 24, 30. டிச. 3, 6, 12, 15.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திராடம் 1 ம் பாதம் ; தலைமைத் தாங்கி வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் கார்த்திகை மாதம் செலவு அதிகரிக்கும். சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவு ஏற்படும். ஒரு சிலருக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும். ஜென்ம ராசிக்குள்ள சுக்ரனால் பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வரும். வியாபாரம், பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வெளிநாட்டு தொடர்பு லாபத்தை ஏற்படுத்தும். சனி பகவான் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய காலமாக இக்காலம் இருக்கும். அவ்வப்போது உடல் நிலையில் கவனம் செலுத்தி வருவது அவசியம். புதபகவான் வக்ரம் அடைந்து விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒப்பந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பத்திரங்களில் கையெழுத்திடும் முன் தாய் பத்திரத்தை பார்த்து நன்றாகப் பார்த்து அதன்பிறகே கையெழுத்திட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனமும், விவசாயிகள் விளைச்சலில் கவனமும் செலுத்த வேண்டும். வீடு, நிலம் விற்றல் வாங்கலை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைப்பது ஆதாயமாகும்.
சந்திராஷ்டமம்: நவ. 22.
அதிர்ஷ்ட நாள்: நவ. 19, 21, 28, 30. டிச. 1, 3, 10, 12.
பரிகாரம்: குரு பகவானுக்கு முல்லை மலர் சார்த்தி வழிபட நன்மை உண்டாகும்.