Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி பாலசுப்பிரமணியர் கோவிலில் ... மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; பக்தர்கள் குவிந்தனர் மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பறிமுதலான ஏகாம்பரநாதர் கோவில் சிலைகள் காஞ்சிபுரத்துக்கு மாற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பறிமுதலான ஏகாம்பரநாதர் கோவில் சிலைகள் காஞ்சிபுரத்துக்கு மாற்றம்

பதிவு செய்த நாள்

15 நவ
2024
10:11

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பயன்பாட்டில் இருந்த உற்சவர் சிலை தொன்மையானது. இச்சிலை, 2015ல் சேதமானதால், புதிய உற்சவர் சிலை செய்ய ஹிந்து சமய அறநிலைய துறை முடிவு செய்தது.


அதன்படி, சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் என, இரு உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. உற்சவர் சிலையை தங்கத்தில் செய்ததில் மோசடி நடந்திருப்பதாக, 2017ல் அண்ணாமலை என்பவர் அளித்த புகாரில், சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின் இவ்வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஹிந்து சமய அறநிலைய துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, கோவில் அர்ச்சகர்கள் என, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. புதிதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் ஆகிய இரு சிலைகளிலும், 8.7 கிலோ தங்கம் இருக்க வேண்டும். ஆனால், முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தியதில், இரு சிலைகளிலும் தங்கம் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து, புதிதாக செய்யப்பட்ட இரு உற்சவர் சிலைகளையும் பறிமுதல் செய்து, அவற்றை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் வைத்திருந்தனர்.


பல ஆண்டுகளாக இவ்வழக்கு விசாரணையில் இழுபறி நீடித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தியடைந்து, மீண்டும் சிவகாஞ்சி போலீசார் விசாரிக்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி, சிவகாஞ்சி போலீசார் இவ்வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு சிவகாஞ்சி போலீசாருக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட உற்சவர் சிலைகளை, சிவகாஞ்சி போலீசாரிடம் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி சிலைகளை பாதுகாப்புடன் நேற்று கொண்டு வந்தனர். நீதிபதி வாசுதேவன் முன்னிலையில், சிலைகளை போலீசார் ஒப்படைத்தனர். அவற்றை, ஏகாம்பரநாதர் கோவிலில் பத்திரமாக வைக்க நீதிபதி அறிவுறுத்தினர். உடன், இரு சிலைகளையும் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீசார் எடுத்து சென்றனர். அங்கு, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமியிடம் அவற்றை ஒப்படைத்தனர். கோவில் வளாகத்தில் உள்ள திருமேனி பாதுகாப்பு மையத்தில் இரு சிலைகளும் வைக்கப்பட்டன. இந்த சிலைகளை, பக்தர் கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar